கனி விமலநாதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: பி.வி.ஆர். ஆப்செட்).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 24×18 சமீ.
தமிழில் அறிவியல் நூல்களை வழங்கும் கனி விமலநாதனின் ஐந்தாவது படைப்பு இதுவாகும். விண்மீன்கள் பற்றிய பல்வேறு விடயங்களையும் எளிய தமிழில் தொகுத்து வழங்கும் நூல் இது. முதற்பகுதியில் அறிமுகம், நாம் காணும் விண்மீன்கள், ஈர்ப்பும் அதன் விளைவுகளும், அயன்ஸ்ரைனின் ஈர்ப்புப் புலக் கொள்கை, விண்மீன்களின் வகைகள் ஆகிய 5 விடயங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் பகுதியில் விண்வெளியின் அமைப்பு, விண்மீன்களின் பிறப்பு, பிரதான தொடர் விண்மீன்கள், விண்மீன்களின் வாழ்க்கை வட்டம், இறக்கும் விண்மீன்கள், திணிவு கூடிய விண்மீன்களின் முடிவு ஆகிய 6 விடயங்களும், இறுதிப் பிரிவாகிய 3ம் பகுதியில் உயிர்ப்புள்ள விண்மீன்கள், வெண்குள்ளர்கள், சந்திரசேகர் எல்லை, பாரமான தனிமங்கள் தோன்றுதல், சுப்பநோவா, நியூத்திரன் விண்மீன்கள், கருந்துளைகள், விண்மீன்களின் தூரம், வூல்வ்-ரயற் விண்மீன்கள், கோள்கள் தோன்றுதல் ஆகிய 10 விடயங்களும் விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் கலைச்சொல் அகராதியொன்றும் தரப்பட்டுள்ளது.