7409 நாடக அனுபவங்கள்.

வி.கந்தவனம். சென்னை 600002: காந்தளகம், 68 அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஜுன் 2010. (சென்னை 600002: காந்தளகம், 68 அண்ணா சாலை).

328 பக்கம், விலை: இந்திய ரூபா 210., அளவு: 22×14 சமீ., ISBN: 978-0-9559585-0-2.

கவிநாயகர் வி.கந்தவனம் அவர்களின் பவளவிழா வெளியீடாக 15.6.2010இல் வெளிவந்துள்ள நூல் இது. நடித்தவை, பிடித்தவை, படைத்தவை என்ற மூன்று பெரும்பிரிவுக்குள் இவரது நாடக அனுபவப் படைப்புக்கள் வகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. நடித்தவை என்ற பிரிவுக்குள் கோயிலும் கூத்தும், எனது முதல் இயக்குநர், இரத்தக்கண்ணீர், சென்னை அனுபவங்கள், கோவையிலும் நடித்தேன், ஆசிரியரானபின் நடித்த முதல் நாடகம், திரு ஏ.ரி.பொன்னத்துரையின் நாடகங்களில், குரும்பசிட்டியின் இளங் கலைஞர்கள், ஒரு வித்தியாசமான அனுபவம், வானொலி நடிப்பு, அரங்கேற்றிய சிறுவர் நாடகங்கள், ஈழத்துக் கூத்து மொழிகள், கனடாவில் நடித்த நாடகங்கள் ஆகிய தலைப்புகளில் அமைந்த 15 இயல்கள் இடம்பெற்றுள்ளன. பிடித்தவை என்ற பிரிவில் சைவசமயமும் நடனக்கலையும், சிவபெருமானின் நாடகங்கள், தொல்காப்பியரின் நாடக வழக்கு, கலித்தொகை காட்டும் காதற் காட்சிகள், பண்டைய கிரேக்க நாடக அரங்கம், நாடகமேதை ஷேக்ஸ்பியர், கம்பரின் நாடகக் கவிதைகள், இணையிலா நாடகர் ஹென்றிக் இப்சன், அபத்த நாடகம், தெருக்கூத்து ஆகிய 10 இயல்களும், படைத்தவை என்ற இறுதிப்பிரிவில் சிறுவர் நாடகம், அரங்க நடிகர், நாடகப் பார்வையாளர், மேற்குலகத்துப் பொழுதுபோக்கு நாடகக் குழுக்கள், நரகோடு சுவர்க்கம், மனவெளியில் நடந்தாய் வாழி நாடகமே ஆகிய ஆறு இயல்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்