7414 குழந்தை மொழி: சிறுவர் பாடல்கள்.

க.வேந்தனார். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை).

88 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை., அளவு: 28×21 சமீ., ISBN: 978-81-89748-72-2.

மித்ர பதிப்பகத்தின் 185ஆவது நூலாக வெளியிடப்பட்ட சிறுவர் பாடல்களைக்கொண்ட நூல். வித்துவான் க.வேந்தனார் (1918-1966) ஈழத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், உரையாசிரியர், பாடநூலாசிரியர் எனப்பல நிலைகளிலும் தனித்துவம் பெற்றவர். 1940இல் எழுத்துலகில் இறங்கிய வேந்தனார் சிறுவர் பாடல்களையும் கணிசமான அளவில் இயற்றியுள்ளார். கவிதைப் பூம்பொழில் (1964) என்ற அவருடைய கவிதைத் திரட்டில் இடம்பெற்ற குழந்தைகளுக்கான பாடல்களைத் தனியாகப்பிரித்து அதில் 35 தேர்ந்த பாடல்களுடன் இந்நூல் அழகான வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இவரது “காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா”  போன்ற பாடல்கள் காலம் கடந்தும் எமது சிறார்களிடையே இன்றும் உலவுகின்றன. இந்நூலின் தேர்ந்த 13 பாடல்களுக்கான  இறுவட்டொன்றும் நூலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Spin Palace spielsaal testbericht 2024

Um als vertrauenswürdig dahinter gelten, müssen österreichische Spielbanken bestimmte Anforderungen erfüllen. Durch zentraler Relevanz ist intensiv eine gültige Zustimmung, diese von seiten einer stattlichen Institut

9878 யாழ்ப்பாணம் யோக சுவாமிகள் வாழ்க்கையும் வழிகாட்டுதலும்.

சிவதொண்டர். மட்டக்களப்பு:  அ.செல்லத்துரை, சிவதொண்டன் நிலையம், செங்கலடி, 1வது பதிப்பு, 1991. (மட்டக்களப்பு: கீன் அச்சகம், முனை வீதி). viii, 322 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 65., அளவு: 21.5×15 சமீ. ஆசான்