7432 பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள்.

தனபாக்கியம் குணபாலசிங்கம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: பி.வி.ஆர். ஆப்செட்).

viii, 116 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 24×18 சமீ.

உருவகக் கதைகள் மூலம் சமகால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் பதிவுகளை அறநெறியில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்ட ஆசிரியரின் ஆரோக்கியமான சமுதாயப்பார்வை அணிசெய்கின்றது. பொருட்செறிவும், தத்துவ ஆழமும் கொண்ட பல ஆய்வு நூல்களை எழுதிய ஆசிரியரின் சிறுவர் இலக்கியப் படைப்பு இது. யார் பெரியவர் – கடவுளா மனிதனா, கடவுள் நியாயமானவரே, வன விலங்குகளின் கடவுள் யார் – உச்சி மாநாடு, பூமி சூரியனிடம் மனிதன் மீது தாக்கல் செய்து முன்வைத்த கருணைமனுவும் விசாரணைகளும், விலங்குகளுக்கு விருது வழங்கும் விழா, நமது பெருமைமிக்க பாரம்பரியங்களை நினைவுகூரும் சேவல்கள், வெளவால் யோகமும் போலி வேடங்களும், தீர்க்கதரிசி மான், தவளைக் குஞ்சும் வட்டநிலாவும், ஆயுள் அற்பமானாலும் முயற்சிகள் அதிகம், அரணைகளின் மறதியும் மனிதனின் மறதியும், தோல்வியைத் தழுவும் குள்ளநரிகள் ஆகிய கவர்ச்சிகரமான தலைப்புகளில்  அமைந்த பன்னிரண்டு உருவகக் கதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

Pueden Echarse Cualquier Mirada

Content Las 11 Reglas Sobre Riqueza De Escribir Contenido Acerca de Tu Sitio web: santas wild ride sitios de ranura ¿lo que Rampa Crear Un