7438 இணைபிரியாத தோழர்.

டி.பி.இலங்கரத்ன (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழ் மொழிபெயர்ப்பு). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் அச்சகம்;, B3-G3 ரம்யா பிளேஸ்).

(8), 279 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-1997-18-2.

புகழ்பெற்ற சிங்கள சிறுவர் நாவலான அம்ப யஹலுவோ என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். இக்கதையின் ஆசிரியர் சிறந்த எழுத்தாளர் மாத்திரமன்றி 1960களில் இலங்கைப் பாராளுமன்றத்தில் அமைச்சராகவும் செயற்பட்டுவந்த ஒரு பிரபல்யமான அரசியல்வாதி. இந்நாவலில் சிறுவர் உலகின் எண்ணங்களையும் செயல்களையும் இவர் தத்ரூபமாகச் சித்திரிக்கின்றார். கதையின் களமாக அமைவது இலங்கையின் மத்திய பகுதியான மலைநாடாகும். பெரும்பான்மைச் சமூகத்தவரின் வாழ்க்கை முறைமைகளையும் பழக்க வழக்கங்களையும் சிறுபான்மையினர் அறிந்துகொள்வதற்கு இந்நூல் உதவுகின்றது. நிமலும் சுனிலும் நட்பின் பெருமையைப் பறைசாற்றும் சிறுவர் உலகப்பிரதிநிதிகளாகச் சித்திரிக்கப்படுகின்றனர்.

இணைபிரியாத தோழர்.

டி.பி.இலங்கரத்ன (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழ் மொழிபெயர்ப்பு). பன்னிப்பிட்டிய: ஸ்டம்பர்ட் லேக் பிரைவேட் லிமிட், 366, ஹைலெவல் வீதி, 2வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 1973. (மல்வான: ஆர்.எஸ். பிரின்டெக், 765/2, வாதுவகம வீதி).

(8), 236 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 280., அளவு: 18×12.5 சமீ.

இணைபிரியாத் தோழர் கிராமத்தில் வசிக்கும் இரு சிறுவர்களின் கதை. அவர்களின் குணநலன்கள் அவர்கள் வாழ்ந்த சூழலுக்கமைய உருவாகும் பாங்கு கதையில் வெளிப்படுத்தப்படுகின்றது. இருந்தும் இயல்பாகவே அவர்களிடம் காணப்படும் பண்புகள் சுற்றுப்புறச் சூழலினால் மாறாதிருக்குந் தன்மையும் இங்கு வெளியாகின்றது. இக்குழந்தைகளின் நடத்தையும் போக்கும் சுற்றாடலுக்கமையவிருந்த போதும் அவர்களது உளப்பாங்கு ஒரே தன்மையானதாய் நிலைத்திருக்கிறது. இருந்தம் சூழலுக்கமைய உருவாகும் அவர்களது செயல்களைக் கொண்டன்றி அவர்களுடைய உள்ளார்ந்த எண்ணங்களைக் கொண்டு அவர்களுடைய நல்ல குணங்களையும் தீய குணங்களையும் சமுதாயம் அளந்தறிய முற்படுமெனக் கூறமுடியாது. இதனை இச்சிறுவர் நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31158).

ஏனைய பதிவுகள்

12861 – ஒரு சில விதி செய்வோம்: கவிதைச் சிந்தனைகள்.

இ.முருகையன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). (6), 80 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 20.5 x 13.5 சமீ. நெடியதொரு