7440 காட்டிலிருந்து நாட்டுக்கு வந்த கரடி.

சுதாராஜ். கொழும்பு 10: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 29.5×25 சமீ., ISBN: 978-955-1997-26-7.

காட்டில் வாழும் குரங்காரின் ஆதரவுடன் நாட்டுக்குள் மனிதரைப் பார்க்க வந்த கரடியாரின் கதை. காட்டுப்பாதையால் வந்த ஒரு பார ஊர்தியில் தொற்றிக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வந்த கரடியார் குழந்தைகளுடன் சேர்ந்து களிப்பில் திளைக்கிறார். சாப்பிடக் கடைக்குச் செல்லும் கரடியாருக்குக் கலப்படம் மிக்க உணவுவகைகளோ, இரசாயனப் புகையால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களோ விருப்பத்துக்குரியனவாக இருக்கவில்லை. இடையில் அவரைச் சுடுவதற்கு வந்த துப்பாக்கிதாரர்களுடன் பேசி குழந்தைகள் கரடியாரைக் காப்பாற்றி காட்டுக்கே அனுப்பிவைக்கிறார்கள்.

ஏனைய பதிவுகள்