எம்.சித்திவிநாயகம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
iv,100 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 18×12.5 சமீ.
விடுதலைப்போரில் சிக்கிச் சிதைந்த ஈழமக்களின் வாழ்வின் தரிசனங்களைக் கவிதைவரிகளில் பதிவுசெய்துள்ளார், கவிஞர் சித்திவிநாயகம். அஞ்சுவது அஞ்சாமை பேதமை, ஓர் இருப்பின் தொலைவு, இயந்திரக்கூண்டில் அடைபட்ட கூலி, கோலியாத்தும் தாவீதும், அந்திமக் காலமும் அடாவடிக்காரரும், மானிடத் தகுதி, அன்னியமுடுத்து அம்மணமாகினேன், சகுனிகள் சூது, வயல் தாவும் வானரங்கள், உச்சி மலை ஓலம், துவம்சம் அல்லது நினைவறா நாள், பயபக்தி, இராப் பேய்கள், தலைகளைப் பறிகொடுத்தோர், பூர்வீகம் தேடும் கனவான்களுக்கு போன்ற 30 தலைப்புகளில் இவரது கவிதைகள் அமைகின்றன. சமகால நிகழ்வுகளின்மீது எழுந்த இக்கவிதைகள் எமது மனதோடு பேசும் ஆற்றல்மிக்கவை.