முல்லை முஸ்ரிபா. கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, 198/30 ஜும்ஆ மஸ்ஜித் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).
xii, 103 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-0280-00-1.
90களுக்குப் பின்னர் முஸ்லிம் தேசக் கவிதைகளை அடையாளப்படுத்தும் 50 கவிதைகளைக்கொண்ட தொகுப்பு இது. இந்நூலாசிரியரின் இருத்தலுக்கான அழைப்பு என்ற முன்னைய கவிதைத் தொகுதி 2003ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருதினைப் பெற்றது. இவரது கவிதைகள் யாத்ரா, மூன்றாவது மனிதன், பூர்வீகம், ஞானம், அஸாருல் ஜசீரா, எங்கள் தேசம், மீள்பார்வை, தினகரன், வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய ஊடகங்களில் வெளிவந்தவை. கல்விப்புலத்தில் மொழித்துறை விரிவுரையாளராக, வளவாளராக, முதன்மை ஆசிரியராக இனம்காணப்பட்டவர் முல்லை முஸ்ரிபா. இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராகவும் முகம்காட்டியுள்ளார். வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியல் பேசும் இவரது கவிதைகள் பெரும் சொல்லாடல்களுக்கான வாசல்களையும் திறக்கிறது. இவரது கவிதைகளில் தாகம், ஏக்கம், அதிருப்தி, துயர் மண்டிய வாழ்வு பற்றிய கோலங்கள் கவிதா இழைகளாக இருந்தாலும் வாழ்வின் மீதான ஈரக் காதலையும் நளினத்தையும் நம்பிக்கையுடன் அவர் எமக்குத் தருகிறார்.