7482 கதிரைமலைப் பள்ளு.

வ.குமாரசுவாமி (பரிசோதித்தவர்). தமிழ்நாடு: திருமயிலை சே.வெ.ஜம்புலிங்கம்பிள்ளை, சென்னை, 1வது பதிப்பு, 1935. (சென்னை: புரோகிரெசிவ் அச்சுக்கூடம்).

210 பக்கம், விலை: சதம் 75., அளவு: 17.5×13 சமீ.

கதிரைமலைப் பள்ளு.

வ.குமாரசுவாமி (பரிசோதித்தவர்). கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இல. 98, வோட் பிளேஸ், 2வது பதிப்பு, மார்கழி 1996, 1வது பதிப்பு, 1935. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

(14), 326 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 17.5×14 சமீ.

கதிரைமலைப் பள்ளு.

வ.குமாரசுவாமி (பரிசோதித்தவர்), என்.சண்முகலிங்கன் (மீள்பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், மீள் பதிப்பு, 2021, 2வது பதிப்பு, மார்கழி 1996, 1வது பதிப்பு, 1935.   (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxviii, 233 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5911-11-0.

18ம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் புலவர் இருநூற்றாண்டு நிறைவு ஞாபகார்த்த பிரசுரமாக இந்நூல் வெளிவந்தது. கதிர்காம ஷேத்திரத்துக் கல்யாண மடஸ்தாபகரான முத்துலிங்க சுவாமிகளின் ஆதரவில் இயற்றப்பட்ட பழைய பள்ளுப் பிரபந்தம் இதுவாகும். கதிரையப்பர் பள்ளு எனவும், கதிரமலைப் பள்ளு எனவும் வழங்கும் இந்நூல் கதிர்காம வேலவர் மீது பாடப்பட்ட பள்ளு, அல்லது உழத்தியர் பாட்டு என்னும் பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். கதிரைமலைப்பள்ளில் பள்ளனும் (மாவலிகங்கைப் பள்ளன்), அவனது முதல் மனைவியான மூத்த பள்ளியும் (மாவலிகங்கைப் பள்ளி) இலங்கை நாட்டினராகவும், பள்ளனது இரண்டாம் மனைவியான இளையபள்ளி (பகீரதா கங்கைப் பள்ளி) இந்தியாவைச் சேர்ந்தவளாகவும் சித்திரிக்கப்படுகின்றனர்.  விநாயகரைக் குலதெய்வமாகக் கொண்டு அவர்க்கு வழிவழியடிமை பூண்டொழுகும் இளையபள்ளியால் விநாயக பிரபாவமும், கதிர்காம வேலரைக் குலதெய்வமாகக் கொண்டு அவர்க்கு வழிவழி யடிமை பூண்டொழுகும் மூத்த பள்ளியால் சுப்பிரமணிய பரபாவமும் கூறப்படுகின்றன. நூலின் அணிகலனாக அரும்பதவுரையும் அருந்தொடர் விளக்கமும், கதிர்காம ஷேத்திர புராண இதிகாச சரித்திர ஐதீக வரலாறுகளும், திருக்கேதீச்சரம், திருக்கோணமலை தல வரலாறுகளும் இடம்பெறுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17939).

ஏனைய பதிவுகள்

17673 சைவ முட்டை: அறிவியல் புனைகதைகள்.

ஆசி கந்தராஜா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 112 பக்கம், விலை: ரூபா 500., அளவு:

Freeplay Online Casino Bonuses

Content Hearts of vegas pokie – Casino Brango: 10 No Deposit Bonus As 100 Free Spins Mascot Gaming Celebrates Decade Of Crash Games At Anniversary

Crypto Incentives

Content Wagering – casino no deposit bonus keep what you win Bitstarz Local casino Opinion: Bitcoin Casino And no Deposit Extra Quick Deposits And Withdrawals