அல் அஸூமத். மாபோல: ஆசிரியர் வெளியீடு, 43/10D, சிங்க வீதி, கெரங்கபொக்குண, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 14: Talent Graphics, 83B, பாபாபிள்ளை பிளேஸ்).
x, 210 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52134-0-0.
பொது மேடைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினித் தொலைக்காட்சி ஆகியவற்றில் இடம்பெற்ற 66 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். 1972இல் முதன்முதலில் பாரதிதாசன் விழாவில் தனது கன்னிக் கவிதையை மேடையேற்றியவர் அல் அஸூமத். அன்றுமுதல் தனித்துவம்பெற்ற பல கவிதைகளைப் படைத்து வந்துள்ளார். மரபுக் கவிஞர் அல் அஸூமத் கடந்த காலங்களில் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளார். மரபுக் கவிதைகளை வழுவின்றியும் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய இலகு தமிழ்ச் சொற்களைக் கொண்டும் எழுதுவதில் அல் அஸ{மத் திறமை மிக்கவர்.