7500 செம்மாதுளம் பூ: கவிதைகள்.

ஷெல்லிதாசன். (இயற்பெயர்: பேரம்பலம் கனகரத்தினம்). திருக்கோணமலை: நீங்களும் எழுதலாம் வெளியீடு, 103/1, திருமால் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2010. (திருக்கோணமலை: அஸ்ரா பிரிண்டர்ஸ், பிரைவேற் லிமிட்டெட், இல.43, திருஞானசம்பந்தர் வீதி).

114 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52563-0-8.

எழுத்துலகில் தடம்பதித்து 40 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் ஷெல்லிதாசனின் முதலாவது கவிதைத் தொகுதி இது. இடதுசாரி சிந்தனை ஆளுமைகொண்ட முற்போக்குக் கவிஞர் குழுவில் ஒருவரும், ஈழத்து மெல்லிசைப் பாடலாசிரியர்களுள் ஒருவருமான இவரது வானொலி மெல்லிசைப் பாடல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 2007-2010 காலப்பகுதிக்குரிய கவிதைகளே பெரும்பாலும் இடம்பிடித்துள்ளன. தொழிலாளர்களின் சுரண்டல்களை, அவர்களது அவநம்பிக்கைகளை, அவலநிலையினை தன் பாடல்களின் பேசுபொருளாக்கியுள்ளார். தலைப்புக் கவிதையில் பாட்டாளிக் கொடியின் நிறத்துக்கு மாதுளம்பூவின் வர்ணத்தை ஒப்பிடுகின்றார்.  கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் வெளியீடான கன்னி வணிகமலர் இதழ்களின் ஆசிரியராக அறிமுகமாகியவர். மக்களின் அறியாமை, அவலம், சுரண்டல் இவற்றைக்கண்டு பொங்கி எழுந்து படைத்த கவிதைகள் இவை. தோழர் கார்த்திகேசன் ஆசிரியரின் இடதுசாரிக்கொள்கைகளில் பிடிப்புள்ள இவரது படைப்புகளிலும் அதன் பாதிப்பு உள்ளது. இவரது 40 ஆண்டுக்கால படைப்புகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் 38 கவிதைகளும், 13 மெல்லிசைப்பாடல்களும், நெல்லை அமுதனின் வாழ்த்துப்பாடலுமாக 52 படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16656 கிளை தவறிய இலைகள்.

பூநகர் பொன். தில்லைநாதன். கிளிநொச்சி: பூநகரி கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், பூநகரி, 1வது பதிப்பு, 2019. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம்). 60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN:

12212 – பிரவாதம் இதழ்எண் 9-10: மே-செப்டெம்பர் 2012.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 147 பக்கம், விலை: