சு.செல்லத்துரை (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: சு.செல்லத்துரை, தலைவர், கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (யாழ்ப்பாணம்: கீதா பதிப்பகம்).
102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.
இளவாலை மயிலங்கூடல் கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை (23.4.1928)அவர்கள் மரபுவழித் தமிழ்ப் புலமையாளர். ஆசிரியராயும் அதிபராயும் கல்விச்சேவை புரிந்தவர். கல்விப் பணியில் ஓய்வு பெற்றபின் எழுத்துத்துறையில் கால்பதித்து 1964 முதல் இன்றளவில் 54 நூல்களைத் தொகுத்தும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். கல்வெட்டு வெளியீட்டில் புதுமை புகுத்தி அதனை ஓர் அறிவியல் ஊடகமாக மாற்றியதில் இவர் கைவண்ணம் நிறையவே உண்டு. சுமார் 37 கல்வெட்டுகளை அறிவியல்சார் பிரசுரங்களாகத் தொகுத்து வழங்கியுள்ளார். தெல்லிப்பழை கலை இலக்கியக்களத்தினர் இவர் எழுதித்தொகுத்த நூல்களை அறிமுகப்படுத்தி விரிவாக இந்நூலில் பட்டியலிட்டுப் பதிவுசெய்துள்ளனர். முன்னட்டை உள்ளிட்ட நூல் விபரங்களுடன் நூல் பற்றிய முகவுரையும் பதிவுக்குள்ளாகியுள்ளன.