தெ.மதுசூதனன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
32 பக்கம், தகடுகள், விலை: ரூபா 30.00, அளவு: 21.5×15 சமீ.
ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தின் பூர்வீக தமிழ்க் கிராமமான சேமமடுவின் பெயரைத் தாங்கி, சேமமடு பதிப்பகம் 2005இல் நிறுவப்பட்டது. தமிழ் நூல் இறக்குமதி-ஏற்றுமதி நிறுவனமாகத் தன் பணியைத் தொடங்கிய இந்நிறுவனம் காலக்கிரமத்தில் பதிப்பகமாகவும் விரிவடைந்தது. இதன் முதலாவது வெளியீடு 1842இல் வெளிவந்த யாழ்ப்பாண அகராதியின் மீள்பதிப்புடன் 2006இல் தொடங்குகின்றது. 120க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ள சேமமடு பதிபபகத்தில் இதுவரை வெளியிட்ட பேராசிரியர் சபா ஜெயராசாவின் கல்வித்துறை சார்ந்த 25 நூல்கள் பற்றியதான திறனாய்வினை இச்சிறுநூல் உள்ளடக்குகின்றது. சேமமடு பதிப்பகம் வெளியிட்ட பேராசிரியரின் கல்விக்கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் என்ற நூலில் தொடங்கி கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல் என்ற நூல் வரையிலான அவரது 25 நூல்களை கல்வித்துறையில் ஈடுபாடுகொண்ட ஆசிரியம்-இதழின் ஆசிரியர் தெ.மதுசூதனன் இந்நூலில் திறனாய்வு செய்துள்ளார்.