8027 புத்தகம் பேசுகிறது.

அம்பிகை பஞ்சலிங்கம். யாழ்ப்பாணம்: பொது நூலகம், நல்லூர் பிரதேச சபை, கோண்டாவில், 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை)

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

நூலக வலுவூட்டலின் மூலம் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2012 ம் ஆண்டு உலக புத்தக தின வெளியீடாக இச்சிறுநூல் உருவாக்கப்பட்டுள்ளது. வாசிப்பின் பெறுமதியை- குறிப்பாக நூலகத்தை சிறுவர்கள் நாடவேண்டும் என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட சிறுவர் குட்டிக்கதைகளை – ஏழையின் தோழன் நூலகம், வாசிப்பே வாழ்வு, பாடை ஏறினும் ஏடது கைவிடேல், நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு, நூல்களே நிம்மதி, பிறந்தநாள் பரிசு, ஊனம் உயர்வுக்குத் தடையல்ல ஆகிய தலைப்புக்களில் நூலக வாசகர் வட்ட அங்கத்தினரான அம்பிகை எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியாவார்.

ஏனைய பதிவுகள்

12501 – வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் வெள்ளிவிழா மலர் 1946-1971.

வி.கந்தவனம் (மலராசிரியர்), ச.விநாயகமூர்த்தி, சி.நடராசா (உதவி ஆசிரியர்கள்), ந.நவமணி, அ.அருள்மணி (மாணவர் பகுதி ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம், வயாவிளான், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1972. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (16),