8042 உள்ளே ஒரு பார்வை: தெற்கு ஊடகவியலாளர்களின் வடக்கு விஜயம்.

சாந்த மஹிந்தபால (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி,1வது பதிப்பு, 2005. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா நிறுவனம், 41, லும்பினி ஒழுங்கை).

xvii, 242 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 955-1274-04-7.

தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக ஜெஹான் பெரேரா பணியாற்றிய வேளையில் எஸ்.பி.நாதன், கலாநிதி ஜெஹான் பெரேரா ஆகியோரை ஆலோசனைக்குழுவாகக் கொண்டு வடக்கு நோக்கிய  தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் விஜயமொன்றினை சமன் செனவிரத்னவின் திட்டமிடலுடன் ஒழுங்குசெய்திருந்தார்கள். அங்கு சென்று வந்தவர்களின் பார்வைகளும் கருத்துகளும் கட்டுரைகளாக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. உண்மையைத் திரித்த செயற்பாடுகளின் விளைவுகளையும் அதன் உண்மைகளையும் கண்டபொழுது (று.வு.மு.ளு. கவிரத்ன), மற்றுமோர் அநாதைச் சிறுவர் இல்லத்தை உருவாக்குவோமா அல்லது இத்துடனே நிறுத்திக்கொள்வோமா? (ஜே.இந்துருவகே),  தென்பகுதி ஊடகவியலாளர்கள் கண்டிராத வடக்கு (ஹரிஸ்சந்திர விதானாச்சி), சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு நல்கவேண்டும் (ர்.நு.யு.ளு.அமரசேகர), யுத்தநிறுத்தத்தினால் வளர்ந்துவரும் வடக்கு (யூ.எம்.திலகரத்ன), கடவுளோ மனிதனோ மீண்டும் வருகின்றார் (ரிச்மண்ட் விஜேசேகர), உண்மையான சமாதானத்தின்பால் அணிதிரள்வோம் (ஜஸ்ரின் கொடிகார), உடனடித் தீர்வினை நோக்கிச் செல்வோம் (பி.டி.லியனகே), மீண்டும் அவர்கள் யுத்தத்திற்குச் செல்ல மாட்டார்கள் (ரி.கே.சுகததாஸ), சூரியன் சந்திரன் தாரகைகள் தவிர யுத்த தீச்சுவாலைகள் அற்ற உலகம் (ஜயலால் ஜயவர்த்தன), வடபகுதி மக்களின் எதிர்பார்ப்பு சமாதானமே (ஜயா விக்கிரம சுரேந்திர), தமிழ் மக்களின் பிரார்த்தனை நாட்டைப் பிரிப்பதன்றி மனிதர்களாக வாழ்வதற்கு அவசியமான அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதே (ஏ.ஏ.பிரேமசிறி), அம்மா அப்பா என்றழைக்க எமக்கும் ஆசை ஆனாலும் (கே.கே.ஜி.குணபால), தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் வடக்கின் சிவில் நிர்வாகமும் (ஸ்ரீ வாவ்வகே), வடக்கு தெற்கு கலந்துரையாடல்களை அதிகரிப்போம் (யூ.பி.குலதிலக்க), கதிர்காமக் கந்தா என்றுதான் இவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்குமோ?(மு.று.குணவர்த்தன), போரின் விளைவுகளை நேரடியாகக் கண்ணுற்றோம் (அரியதாச கொடிதுவக்கு), சமாதானத்தை உருவாக்கவேண்டியது எமது பொறுப்பாகும் (எம்.பி.சந்திரபால), தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறையும் இலங்கையின் அரசியலும் (சிறிசேன ஹேவாகம), இருபது ஆண்டுக்கால யுத்தத்தின் விளைவுகளை கண்ணூடாகவே கண்ணுற்றேன் (யூ.பி.குலதிலக்க), யுத்தத்தின் கசப்பான உண்மைகள் (பர்ட்டி நந்தனி வீரக்கோன்), நாட்டில் எரிந்துகொண்டிருக்கும் யுத்தத்தை இன்றாவது முடிவுக்குக் கொண்டுவருவோமா? (று.P.தர்மசேன), மறுமலர்ச்சி அடைந்துவரும் கிளிநொச்சி (சுனில் ஜயசேகர), புலிகளும் சட்டக் கொள்கைகளும் சிவில் நிர்வாகமும் (லசந்த விஜயரத்ன), உண்மையான சமாதானம் எங்கே? (சுஜித் குமார லொக்கு யத்தெஹிகே), யாருக்கு வேண்டும் யுத்தம்?(கே.தயாசேன), புலிகளின் அரசியல்துறையின் முக்கியமான கடமை (ஜெஹான் பெரேரா) ஆகிய கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  191948).

ஏனைய பதிவுகள்

9835 உயர்தர வகுப்புகளுக்குரிய புது உலக சரித்திரம் 1789-இன்று வரை.

வி.இ.நிக்கலஸ். யாழ்ப்பாணம்: வி.இ.நிக்கலஸ், வரலாற்றுத்துறை விரிவுரையாளர், பயிற்சிக் கல்லூரி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி). xv, 464 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 7.75, அளவு: