8045 மாயை பற்றிய கருத்தும் சங்கர வேதாந்தக் காட்சியும்.

நா.ஞானகுமாரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யுஜீ 50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை).

xiv, 118 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-015-4.

பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் 34 வருடங்களாகக் கடமையாற்றுபவர். பன்னூலாசிரியரான இவர் மெய்யியல், சைவ சித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர்.இந்நூல் அறிமுகம், வேதாந்த மாயை, சைவசித்தாந்த மாயை, வேதாந்தத்தில் காட்சி, மாயை, காட்சி பற்றிய விமர்சனங்கள், முடிவுரை ஆகிய ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. வேதாந்த சைவசித்தாந்த நோக்கில் மாயை பற்றிய தெளிவு நூலின் முக்கிய அம்சமாகும். அடுத்து வேதாந்தத்தில் காட்சி பற்றி ஆராய்கிறார். அதனையடுத்து மாயை காட்சி பற்றிய மதிப்பீட்டினை முன்வைக்கிறார். வேதாந்தத்தினைப் புரிந்துகொள்வதற்கு மாயை பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்துகொள்ளுதல் பெரிதும் பயனுடையதாக அமையும் என்ற நூலாசிரியரின் கருத்திற்கமைய இந்நூல் உருவாகியுள்ளது.  அத்வைத கோட்பாட்டின் முக்கிய அம்சங்களை நாம் தெளிவுபடுத்த இந்நூல் உதவுகின்றது.

ஏனைய பதிவுகள்

Ct Sports betting Programs

Blogs How to Down load 1xbet Android os Software Inside the 2024? Tips Create? Have fun with A great Vpn To view Website To own

15262 தமிழ் நயம் 2000: ரோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா மலர்.

பெ.செ.செந்தூரன் (இதழாசிரியர்), செ.கீர்த்தன், உ.லெ.மு.ரெஷா, ஸ்ரீகஜேந்திரன் (துணை ஆசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 2 : அரசன் பிரின்டர்ஸ்). (336) பக்கம், புகைப்படங்கள்,