ஆபிரஹாம் டி கோவூர் (மூலம்), சிங்கராயர் (தமிழாக்கம்). கோவை 641402: சூலூர் வெளியீடு, 8, பால இல்லம், நஞ்சப்பா குடியமைப்பு, சூலூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (சென்னை 5: மணி ஓப்செட்).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 21.5×13.5 சமீ.
இந்தியாவில் கேரளத்தைச் சேர்ந்த மனோதத்துவ சிகிச்சையாளரும் பகுத்தறிவுவாதியுமான ஆபிரகாம் கோவூர் (10.4.1898- 18.09.1978) நீண்டகாலம் இலங்கையில் தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி 1959இல் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வின் பின்னர் தீவிர பகுத்தறிவுப் பிரச்சாரகராக ஆவியுலகம், சித்து மற்றும் ஆன்மீகச் சித்தர்களின் சித்துவிளையாட்டுகளை கேள்விக்குட்படுத்தியவர். இந்நூலில் முதல் மூன்று கட்டுரைகளும் கோவூர் பற்றியதாகவும், பின்னையவை இறந்துபோன வசந்த பாபுராவுக்கு மீண்டும் உயிர் வந்தது, இரட்டைச் சகோதரிகளாக மறுபிறவி எடுத்த இரண்டு சகோதரிகள், தன்வயப்படுத்திப் பின்நோக்க வைப்பதால் சீரடையும் கண்பார்வை, மதமும் உயிர்வாழ்வின் தன்னியல்பான தோற்றமும், மறுபிறவியும் அதிசய பிறவிகளும், மறுபிறவியும் தன்வயப் பின்நோக்குதலும், சாவுக்குப் பின் நமக்கு வாழ்வு உண்டா, கருமமும் மறுபிறப்பும், பாரம்பரியமும் சுற்றுச் சூழலும், பார்ப்பன உடம்பில் பறைய இதயம், மீண்டும் உயிர்பெறச் செய்தல், ஒரு ஆவி கொல்லப்படுகிறது, எதையும் தாங்கும் இதயம், சாவைத் தவிர்ப்போம், பில்லி சூனியம், பேய் பிடித்தலும் பரவச நிலையும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பகுத்தறிவுக் கட்டுரைகளாகவும் அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 177505).