8051 உளவியல் ஊடுதலையீடுகள்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

vi, 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-685-012-3.

சமகால உளவியல் சிந்தனையின் பல்பரிமாண விரிசிந்தனைகளை தமிழில் ஆக்கமாக வெளிப்படுத்துவதில் பேராசிரியர் சபா.ஜெயராசாவுக்கு முக்கியமான இடமுண்டு. குறிப்பாக,  கல்வி உளவியல் மரபைத் தகர்த்து, சமூக மானிடவியல், பண்பாட்டியல், மெய்யியல், அரசியல், பொருளியல் முதலான துறைகளின் ஊடாட்டத்திற்கும் ஊடுதலையீட்டுக்கும் (interventions) உரிய அறிவுப்புலமாக வளர்த்தெடுக்கும் முறைமையால் பேராசிரியர் தனித்து விளங்குகின்றார்.  இந்நூல் சமூக நோயியல், வன்படிமங்களின் பரவல், பொறியுடல், போரின் வடுக்கள், ஆற்றல் வெளிப்பாட்டுக்கு வினையூட்டல், விருத்தி உளவியலும் பிரயோக நிலையும், அறிகைச் சிகிச்சை முறை, நடப்பியற் சிகிச்சை, இருப்பியச் சிகிச்சை, வாழ்வின் அர்த்தங்களைத் தேடும் சிகிச்சை, தனிநபரைக் குவியப்படுத்தும் சிகிச்சை, பரிமாற்றப் பகுப்பாய்வு, வாசிப்பும் உளச் சுகமும், கதையாடற் சிகிச்சை, மகிழ்பொழுது மற்றும் மகிழ்செயல், சீர்மியமும் இலக்கியங்களும், பால்நிலைச் சீர்மியம், சிந்தனையும் எழுபாய்ச்சற் கோட்பாடும் ஆகிய 18 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9059 விஞ்ஞானமுறை: நிகழ்தகவு, புள்ளிவிபரவியல், சிறுகட்டுரைகள்.

எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, உடுவில், 1வது பதிப்பு, ஆவணி 1996. (வவுனியா: விசாலா அச்சகம்). 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. Logic Part 2 A/L