8057 உண்மைகள் உலருவதில்லை: வாழ்வியல் வசந்தங்கள் 08.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

153 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-09-3.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இத்தொகுதியில்  பொறுப்புக்கள், உண்மைகள் உலருவதில்லை, குழந்தைகள், ஏமாற்றுதல், நாளைக்கு, சிறை, பொறுமை, கொள்கை, உயிர், தண்டனை, ஏட்டிக்குப் போட்டியாகப் பேசவேண்டாம், காதல் திருமணங்களும் பெற்றோர் எண்ணங்களும், அன்போடு இணைந்த கண்டிப்பு அவசியம், அடங்கிப் போதல் அவமானப்படுதலை ஏற்பதைப் போலாகும், இளம் பராயத்துத் திருமணங்கள்- பாதிப்புக்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

17645 உறைந்துபோன உண்மைகள்: சிறுகதைகள்.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: