8062 கோழைகளாய் வாழுவதோ?: வாழ்வியல் வசந்தங்கள் 04.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

152 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-05-5.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இத்தொகுதியில் அவமானப்படுத்துதல்  அத்துமீறலே, பொறாமையெனும் பெருந்தீ, கோழைகளாய் வாழுவதோ, எழுச்சி, வீழ்ச்சி, இல்லறம், உண்மை, பொய், விதைத்தல், ஜனனம், மரணம், கடன், சலிப்பு, ஆற்றலை வளர்ப்பதே வாழ்க்கை, கணவன்-மனைவி பொருத்தம் என்பது என்ன?, அயலாரோடு மனஸ்தாபம் கொள்ளற்க ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

14289 யாழ்ப்பாணப் பகுதியில் காணாமற் போனோர் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை.

காணாமற்போனோர் சம்பந்தமான விசாரணைக்குழு. கொழும்பு 8: இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 36, கின்சி றோட், 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 239 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: