பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).
140 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-08-6.
பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக இக்கட்டுரைகள் அமைகின்றன. இத்தொகுதியில் உற்சாகம், மறைத்தல், திடசிந்தனை, சுயநலம், புரிந்துணர்வு, கருமை, சவால்கள், சும்மா இருத்தல், விதி, கண்முன்னே வாழும் மாதரசிகளைப் போற்றுங்கள், இனிமை தரும் எளிமையான வாழ்வு, குடும்ப உறவுகளை மட்டுமல்ல சமூக உறவுகளையும் வளர்த்திடுங்கள், விவாகரத்துக்களும் ரணமாகும் மனங்களும், சொர்க்கம் எங்கே ஆகிய 14 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.