மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர், 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி).
viii, 96 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-98925-4-0.
யாழ்ப்பாணப் பிராந்திய பத்திரிகையான வலம்புரி நாளிதழில் வெளிவந்த நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற குறுங்கட்டுரைத் தொடர் நூலுருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் எழுதிய 48 அற இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நம் முன்னோர்கள் நாலடியார், திருக்குறள் போன்றஅறநூல்களில் சொல்லிப்போன ஆழ்ந்த கருத்துக்கள் எளிமையான சிறிய கட்டுரைகளின் வாயிலாக மீள்வாசிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. இளையோர்களுக்கான அறவியல்சார் உளவளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் இக்கட்டுரைகள் வழிவகுக்கின்றன.