பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2×1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).
154 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-18-5.
பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக இக்கட்டுரைகள் அமைகின்றன. தனிமை, கனிவு, கடவுளும் மதங்களும், சந்தர்ப்பவாதிகளும் சந்தர்ப்பவாதங்களும், கோபம், மரணத்தின் பின் வாழ்வு, புகழுடன் திகழு, இயல்பு, கௌரவம், எதிரிகள், ஒப்பீடு செய்வதைத் தவிர்த்திடுக, பிறர் துன்பம் களைதலே நாம் அடையும் இன்பம், ஒட்டுக்கேட்டல் கெட்ட பழக்கம், வெற்றிகள் போலவே தோல்விகளும் அற்புதமானவை, தாய்மை, சமையல் கலையில் கைதேர்ந்தவர்களாகப் பெண்கள் விளங்குவதன் இரகசியம், குரு சிஷ்யன் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.