8074 மௌனம்: வாழ்வியல் வசந்தங்கள் 16.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

134 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-17-8.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. சந்தர்ப்பங்கள், பாசம், தெளிவு, மௌனம், எளிமை, குரோதம்,  சலனம், கணவன், குடும்ப உறவு கற்பனையல்ல, பெண்கள் உழைப்பைச் சுரண்டும் மத்திய கிழக்கு நாடுகள், பாசத்தைக் காட்டி சுதந்திரத்தைப் பறிக்கவேண்டாம், முதியோர் இல்லங்களில் பெற்றோர்கள்,  பேருந்து செலுத்திவரும் அஞ்சலா ஆகிய 13 கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்குகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத் தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இந்நூலில் நீதி நூல்களையொத்த ஓரிரு வரிகளில் அமைந்த போதனைகளும் சிந்தனையில் உதித்த கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Unser Besten Spielbank

Content Live Casino Bitcoin – Man sagt, sie seien 1 Euro Casinos Ungewöhnlich? Roh Jack Spielbank Weswegen Schenken Casinos Einen 15 Provision Bloß Einzahlung? kann

16921 கலைவாரிதி : அரியாலையூர் உருத்திரேஸ்வரன் அவர்களின் ஓராண்டு நினைவுமலர்.

சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ். யாழ்ப்பாணம்: திருமதி விஜயராணி உருத்திரேஸ்வரன், அரியாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 230 பக்கம், புகைப்படம், விலை: