P.கமல்தாசன். கொழும்பு: Islamic Book House, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (கொழும்பு: Islamic Book House).
vi, 246 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×15 சமீ.
வர்த்தகத்துறையில் பயிற்சிபெற்ற ஆசிரியராகக் கல்வித்துறையில் பிரவேசித்த நூலாசிரியர் B.A., PGDE, PGDM ஆகிய உயர் கல்வித்துறைப் பயிற்சிகளைப் பெற்று அளவையியலும் விஞ்ஞான முறையும் என்ற துறையில் கற்பித்து வருகின்றார். விஞ்ஞான முறையியல்வாதிகள், வானியல் விஞ்ஞானிகள், வானியல் கோட்பாடுகள், இந்திய விஞ்ஞானிகள், பௌதிகவியல், மருத்துவம், உயிரியல் கோட்பாடுகளும் விஞ்ஞானிகளும், பொருளியல் கோட்பாடுகளும் விஞ்ஞானிகளும், மெய்யியல்; கோட்பாடுகளும் விஞ்ஞானிகளும், உளவியல் கோட்பாடுகளும் விஞ்ஞானிகளும், புள்ளிவிபரவியல், வகைமாதிரி, புள்ளிவிபரக் கணிப்பீட்டு முறைகள், சமூக விஞ்ஞானம், விஞ்ஞான முறைகள் (அவதானம், பரிசோதனை), கருதுகோள், உய்த்தறிவு, தொகுத்தறிவு அனுமானம் ஆகிய விடயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.