குலசிங்கம் றஜீபன். ஏழாலை: சைவசித்தாந்த ஆய்வு நிறுவனம், இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiii, 143 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-338-9.
ஈழத்தவரால் தொடங்கி ஈழத்தவரால் முடித்துவைக்கப்பட்ட ஒரு உரைவடிவமே சூசனமாகும். ஆறுமுக நாவலரால் பெரியபுராணத்திற்கு எழுதப்பட்ட வசனமும் சூசனமும் முதல் 23 நாயன்மார்களுடைய புராணத்துக்கு எழுதியதோடு நிகழ்ந்த நாவலரின் மறைவுடன் தடங்கலுற்றது. பின்னர் எஞ்சிய நாற்பது அடியார்களினதும் புராணங்களுக்கு சூசனம் எழுதியவராக பண்டிதமணி ஏழாலை மு.கந்தையா அவர்கள் விளங்குகின்றார். இவர்கள் இருவரது சூசனங்களையும் முன்வைத்தே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழாலை மு.கந்தையா அவர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவரான சைவப்புலவர் குலசிங்கம் றஜீபன் எழுதியுள்ள இந்நூல் பெரிய புராணம்: ஓர் அறிமுகம், இறைக்கோட்பாடு, உயிரும் தளையும், சைவசித்தாந்த வாழ்வியல், விடுதலைக் கோட்பாடு, முடிபுரை ஆகிய ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229602).