வி.பி.தனேந்திரா (புனைபெயர்: யாழ்.ராதவல்லி). யாழ்ப்பாணம்: பாதுகாவலன், 360 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (யாழ்ப்பாணம்: ஏ.சி.எம்.அச்சகம்).
xii, 62 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×15 சமீ.
யாழ். அரியாலைக் கிராமத்தைச் சேர்ந்த இறைபணியாளர் வி.பி.தனேந்திரா கத்தோலிக்கத் திருச்சபை வட்டத்திற்குள்ளும், அதற்கு வெளியிலும் பல ஆக்கபூர்வமான இலக்கியங்களைப் படைத்து வருபவர். இலங்கைத் திருச்சபையின் தமிழ்ப் பத்திரிகையான தெளிவு பத்திரிகையின் ஆரம்பம் முதல் அதன் ஆசிரியராக இயங்கிவருகின்றார். இந்நூலில் இவரது முப்பது இறையியல் கட்டுரைகளையும் 23 கீர்த்தனைப் பாடல்களையும் இவர் வழங்கியுள்ளார். உளவியல், ஆன்மீகம், சமூக மேம்பாடு, மனித மாண்பு, புனித வாழ்வு எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய இவரது கட்டுரைகளில் வாசகர்களின் கவனஈர்ப்பைப் பெறும்வகையில் சிறு சம்பவங்களையும், கதைகளையும மேற்கோள்களாகப் பதிவுசெய்திருக்கின்றார். இவை வலம்புரி, உதயன், யாழ்.தினக்குரல், தெளிவு ஆகிய பத்திரிகைகளில் முன்னர் வெளிவந்தவை.