மு.சிங்கராயர். யாழ்ப்பாணம்: தமிழ்மதி, 955/9, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).
xi, 88 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 100., அளவு: 22×15 சமீ.
கிறிஸ்தவ இறையியல் பார்வையில் இவ்வெண்பாவை 28 அத்தியாயங்களில் ஆசிரியர் எழுதியுள்ளார். மனிதம் கேட்ட மங்கள வாக்கு, குயில்பாடிய புதிய கீதம், சொந்த ஊரில் குந்த இடமில்லை, சேற்றில் பிறக்கின்றது செந்தாமரை, கைகுவித்து வணங்குகின்றனர் தெய்வ மகனை, வாளாக நெஞ்சைப் பிளந்த வார்த்தைகள், வெண்புறாவைத் தேடுகின்றது வல்லூறு, இடப்பெயர்வு தானே இதுவுமொன்று, பிரிவே நீ வாழ்க, தொழிலகத்திற் சூசையுடன் தூயவன், சூசையெனும் நிழல்மரம் நில்லாமற் சாய்ந்ததே, வாழ்வூற்றுத் தந்த வற்றாத சாறு, தந்தையின் வழியில் வாழ்பவனே என் தோழன், அவனி மறக்காத பவனி, சரித மணலில் விழுந்த சோகச் சுவடு, வேட்டை நாய்களிடையே வெள்ளாடு, பொற்றூண் மேனியைக் கற்றூணிலே கண்டேன், முள்ளும் மூங்கிலும், இதோ மனிதன், சுமக்கின்றதே செம்மறி சிலுவையை, வரலாற்று நாயகன் கண்ட வன்சிலுவையேற்றம், ஒளிவெள்ளத்தின் உலகபிதா மறைந்தார், தாயின் மடியில் தங்க மகன், தனிமரமாகிவிட்ட அருளின் கனிமரம், மரியாளே உலகிற்கு ஒரு தாய், சமாதானத்தின் பூங்காற்றே சற்று வீசம்மா, மாலையோ மாலை, நாளும் போற்றுவோமே நாயகியை ஆகிய தலைப்புகளில் வியாகுல மாதாவின் வாழ்க்கை வெண்பாவாக விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131449).