A.C.அகார் முஹம்மத். பேருவளை: அல்கலம் பதிப்பகம், 26/2 யூசுப் அவென்யு, சீனன்கோட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (கொழும்பு 13: குவிக் கிராப்பிக்ஸ் பிரின்ட், 5-1/20, சுப்பர் மார்க்கெட், கொட்டஹென).
144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 955-9454-02-1.
இலங்கையின் முக்கிய இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜாமிஆ நளீமிய்யாவின் முத்திங்கள் வெளியீடான இஸ்லாமிய சிந்தனை (பிக்ஹூ ஷ்ஷரீஆ) சன்மார்க்க கேள்வி-பதில் பகுதி அதன் வாசகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அதன் நூலுருவே இதுவாகும். தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் நம்முன் எழுந்து நிற்கும் பிரச்சினைகளுக்கான இஸ்லாமியப் பரிகாரங்களைத் தருவதாய் இக் கேள்வி-பதில்கள் அமைகின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள சட்ட விளக்கங்கள், அல்குர் ஆன், அஸ்ஸூன்னா ஆகியவற்றின் அடிப்படையிலும், ஆரம்பகால இமாம்களின் தீர்ப்பக்களைத் தழுவியும் அமைந்தவையாகும். நூலாசிரியர் A.C.அகார் முஹம்மத், ஜாமிஆ நளீமிய்யாவின் கல்வித்துறைப் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45424).