வொய்ஸ் குழாம். பத்தரமுல்ல: தொண்டர் தகவல் ஒருங்கிணைப்பு நிலையம் (Volunteerism Information and Coordination Centre – VOICE), அரச சார்பற்ற தாபனச் செயலகம், சமூக சேவைகள் சமூக நலன்புரி அமைச்சு, 5வது தளம், செத்சிரிபாயா,1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
2004இல் தாபிக்கப்பட்ட அரச சார்பற்ற தாபனச் செயலகத்துடன் இணைந்துள்ள VOICE அமைப்பினர் தம் பணியாளர்களுடனான நேர்காணல்களின் வழியாகத் தமது வெற்றிகரமான சமூகசேவைகளைப் பின்புலமாகக் கொண்ட செயற்பாடுகளை விளக்கும் பத்துக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தாம் கொடுப்பதைவிட தொண்டர்கள் அதிகமாகவே பெற்றுக்கொள்கிறார்கள், REACH Now 08 இளைஞர் தொண்டு நடவடிக்கை, MIT விருதுபெற்ற ஒருவரின் கதை: தகவல் தொழில்நுட்பத்தினூடான (IT) தொண்டு, பெண்கள் அபிவிருத்தி ஸ்தாபனம் -தொண்டு நடவடிக்கையில் பெண்கள், தலைமைத்துவ கற்கை இளைஞர் தொண்டு நடவடிக்கை, ECO-V உலகத்திற்கான தொண்டு நடவடிக்கை, மொரட்டுவை/ரத்மலானை லயன்ஸ் கழகம்-தொண்டாற்றல் மூலமான அடைவு, உறுதிமிக்க பலம்வாய்ந்த தொண்டர் அமைப்பு-தொண்டு நடவடிக்கையில் பெண்கள், முதியவர் ஒருவரின் கதை- தொண்டு நடவடிக்கையில் முதியவர்கள், சமூக ஒற்றுமைக்கான கலைக்கூடம்- தொண்டு நடவடிக்கையும் கலையும் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 228834).