சுதந்திர தெற்காசிய ஆணைக்குழு (மூலம்), ஏ.கே. திருஞானசம்பந்தன் (மொழிபெயர்ப்பாளர்), எஸ்.ராஜலிங்கம், ஏ.பாஸ்கரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 3: சார்க் செயலகம், இணை வெளியீடு, இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகம், 99, சாந்த மைக்கேல் வீதி, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
152 பக்கம், விளக்கப்படம், விலை: யூ.எஸ் டொலர் 5., அளவு: 25.5×19 சமீ., ISBN: 955-8708-30-5.
இவ்வறிக்கை 1992ம் ஆண்டைத் திரும்பிப் பார்த்தல், புதிய யதார்த்தங்கள், ஓர் வறுமை ஐந்தொகை, நடைமுறைப்படுத்தும் விடயங்கள், ஓர் நம்பிக்கைத் தோட்டம்: தெற்காசியாவில் அதி சிறந்த செய்முறைகள், வறுமையற்ற தெற்காசியாவை நோக்கிய வீதி நிலப்படம், குறியிலக்குகளை மீளமைத்தல், ஓர் செயற்திட்டத்தை நோக்கி, தொழிற்பாட்டு சிபரிசுக்கள் ஆகிய ஒன்பது பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. இவ்வறிக்கை 2010ஆம் ஆண்டளவில் வறுமையை அரைவாசியாகக் குறைத்தல், போசணைக் குறைவை அகற்றுதலும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலும், சமூக பாதுகாப்பு முறைமையொன்றை சரியான இடத்தில் வைத்தல், 2010ம் ஆண்டளவில் சுத்தமான குடிநீரையும் சுகாதாரத்தையும் பெறுவதற்கு அணுகுமுறையில்லாத மக்களின் எண்ணினக்கையை அரைவாசியாகக் குரறைத்தல், சகல வடிவங்களிலுமான சட்டவிரோதப் பொருட்களின் வர்த்தகத்தையும் சிறுவர்கள் தொழிலுக்கமர்த்தப்படுவதை அகற்றுதல் ஆகிய இலக்ககளை வலியுறுத்துகின்றது.