8265 ஆபத்து  விளிம்பிலுள்ள கற்போர்.

சபா.ஜெயராசா. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 2வது பதிப்பு, 2008, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

(6), 99 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-117-6.

ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர்  (At risk Learnrs) தொடர்பான இந்நூல் 20 இயல்களில் எழுதப்பட்டுள்ளது. ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர், கற்போர் அனுபவிக்கும் தாழிகை, ஒடுக்கப்பட்டோரும் கல்வியும், வகுப்பறைகளில் நிகழும் பிறழ்வு நடத்தைகள், மாணவர்களும் தொடுபயமும், உளமூட்டக் குலைவு, ஆபத்து விளிம்பிலுள்ள கற்போரும் நெருக்கீடுகளும், ஆளுமைக் குலைவு, ஒத்துணர்வு, கற்பித்தலைத் திட்டமிடல், ஆசிரியரும் சீர்மிய நடவடிக்கைகளும், தழுவல் போதனாமுறைமை, தனியாளைக் குவியப்படுத்தும் போதனாமுறைமை, கற்றல் உபாயங்கள், கற்றல் திறன்களை வளப்படுத்தல், நேரடியான போதனை நடவடிக்கைகள், வகுப்பறை முகாமைத்துவம், உளநிலையமைவு சவால்களும் தீர்வு முனைப்பும், கற்றல் தொடர்பான இடர்களை எதிர்கொள்வோர், உளத் தாக்கங்களுக்கு உள்ளான மாணவர்களும் மீட்புக்குரிய கற்பித்தலும் ஆகிய தலைப்புகளில் இவ்வியல்கள் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

8260 வாழ்வா அணுக்குண்டால் அழிவா?

வல்வையூர் சி.பொன்னையா. வல்வெட்டித்துறை: சி.பொன்னையா, சட்டத்தரணி, 1வது பதிப்பு, கார்த்திகை 1983. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). (5), 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. உலக நாடுகளின் ஆதிக்கப்போட்டியால்