துரைச்சாமி சிவபாலன். லண்டன்: மழலை நிறுவனம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park).
x, 98 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×20 சமீ., ISBN: 978-955-685-013-0.
லண்டன் வித்துவான் வேலன் இலக்கிய வட்டத்தின் உறுப்பினராக இருக்கும் துரை சிவபாலன், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டம் பெற்றவர். மன்னார் பிரதேசத்தில் ஆசிரியராகப் பணியாற்றி 1990இல் புலம்பெயர்ந்து இத்தாலி-பலெர்மோ பகுதியில் வாழ்ந்த வேளையில் இவர் மழலை என்ற பெயரில் கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து மாதாந்தம் அதனை தொடர்ச்சியாக சிலகாலம் வெளியிட்டவர். 2000ஆண்டளவிலிருந்து லண்டனில் குடும்பத்துடன் வாழ்ந்துவருகின்றார். புலம்பெயர்ந்த சிறார்களின் தமிழ்க் கல்வியின் பயன்பாட்டுக்கென இந்நூல் வண்ணப் படங்கள் சகிதம் வெளியிடப்பட்டுள்ளது. புலம்பெயர் மாணவர் மத்தியில் அவர்களின் தமிழ்மொழி அறிவை மதிப்பீடு செய்து, பாடங்கள் அ, ஆ, இ என மூன்று பகுதிகளாக இந்நூலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அ விலிருந்து மொழிப் பயிற்சியை ஆரம்பிக்கத்தக்கதாகவும், குறிப்பிட்ட தரத்தை ஒரு மாணவர் அடைந்ததும் இடையிலிருந்து -பொருத்தமான பகுதியிலிருந்து தொடரத் தக்கதாக ஆ,இ என்ற இரு பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.