த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
iv, 156 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்டுள்ள 10,11ஆந் தரங்களுக்கான தமிழ் இலக்கியத் தொகுப்பு நூற் பாடங்களை விளக்கும் வழிகாட்டியாகவும், 2008ஆம் ஆண்டு முதல் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் என்னும் பாடத்திற்குத் தோற்றுவோருக்கு உதவும் துணை நூலாகவும் அமையும் வகையில் இந்நூல் ஆக்கப்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வினாக்கள் அனைத்தும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலில் உள்ளடங்கிய 18 பாடங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்றுள்ளன.