ஜான். சென்னை 600014: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 105 ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, 2008. (சென்னை 600014: சாருபிரபா பிரிண்டர்ஸ்).
144 பக்கம், வண்ணப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×14 சமீ.
ஈழத்தமிழர்களின் போர்க்கால வாழ்க்கையைத் திரைப்படமாக வன்னி மண்ணிலிருந்து தயாரித்து வழங்கிய இயக்குநர் ஜான், ஆணிவேர் படப்பிடிப்பின்போது ஈழத்தில் தனக்கேற்பட்ட அனுபவங்கள், உணர்வலைகள் என்பவற்றை விபரித்திருக்கிறார். இந்நூலின் இரண்டாம் பிரிவில் ஆணிவேர் திரைப்படத்தின் திரைக்கதை உரையாடலின் எழுத்துரு இடம்பெற்றுள்ளது. பக்கங்கள் தோறும் வண்ணப்படங்கள் காணப்படுகின்றன.