8422 இணைந்து வாழ: சிறுவர் நாடகம்.

து.கௌரீஸ்வரன். மட்டக்களப்பு: மூன்றாவது கண் பதிப்பு, உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, சீலாமுனை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (மட்டக்களப்பு: வணசிங்கா அச்சகம், 126/1, திருமலை வீதி).

vii, 25 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இச்சிறுவர் நாடகம் 2011 தேசிய சிறுவர் நாடக விழாவில் மட்டக்களப்பு, கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய சிறுவர்களின் ஆற்றுகையாக கொழும்பு ஜோன் டி சில்வா கலையரங்கில் அளிக்கை செய்யப்பட்டது.  இந்நாடக விழாவில்,  அந்த ஆண்டின் சிறந்த சிறுவர் நாடக எழுத்துருவாகவும் தெரிவு செய்யப்பட்டது. சிறந்த சிறுவர் நாடகத்திற்கான முதலாவது பரிசையும் விருதுகளையும் பெற்றுக்கொண்டது. மேலும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறுவர் நாடக விழாவில் சிறந்த முதலாவது நாடகமாகவும் பரிசு பெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229688).

ஏனைய பதிவுகள்