ஜெகன் சிந்தியா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
viii, 30 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0766-06-2.
திருமதி ஜெகன் சிந்தியா திருக்கோணமலை ஆத்திமோட்டையில் மெதடிஸ்த திருச்சபையால் நடத்தப்படும் முன்பள்ளியில் சேவையாற்றுபவர். அவர் எழுதிய ஓநாய்க் குட்டியும் ஆட்டுக்குட்டியும், அழகற்ற வளைந்த மரம், அற்பர்களுக்கு வாழ்வு வந்தால், தீயவரையும் திருத்தவேண்டும், அறிவுரையைக் கேட்டு நட, அழகின் பெருமை, பிறரைப்போல் நடவாதே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஏழு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.