8452 விநாயகர் திருவருள்: சிறுவர் சிந்தனைக் கதைகள்.

அநு.வை.நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென் மயிலை, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, மார்ச் 1992. (யாழ்ப்பாணம்: அம்மா, இணுவில், மருதனார்மடம்).

(3), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ.

ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகி எனப் பல்பரிமாணங்களில் சேவையாற்றியதுடன் இலக்கிய உலகில் ஓர் எழுத்தாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் அனு.வை.நாகராஜன். அறிவியல், பக்தி இலக்கியம், சிறுவர் இலக்கியம், நாட்டார் வழக்கு, திறனாய்வு என்பனவாகப் பல்வேறுபட்ட திசைகளிலும் இவரது எழுத்துப் பயணங்கள் அமைந்துள்ளன. இந்நூலில் ஆன்மீகச் சிந்தனைகளைத் தூண்டிச் சிறுவர்களுக்கு அவற்றைக் கதைகளாகப் படைத்திருக்கின்றார். கதைக்கொரு சிந்தனை வைத்து அதற்கு விளக்கமும் கூறுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86693).

ஏனைய பதிவுகள்