ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
viii, 76 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ.
சிறுகதைகள், சிறுவர் பாடல்கள் என எழுதிவரும் திருமதி ஜெனிராவின் சிறுவர்களுக்கான கட்டுரைத்தொகுதி இது. எனது செல்லப்பிராணி, நான் விரும்பும் பெரியார், எனது பொழுதுபோக்கு, மரத்தின் சுயசரிதை, பயங்கரக் கனவு, மழை நாள், உடற்பயிற்சியின் அவசியம் என இன்னோரன்ன 50 சிறு கட்டுரைகளின் வாயிலாக, 3 முதல் 5ம் வகுப்பு வரை கற்கும் மாணவர்களின் தமிழ் மொழிப் பயிற்சிக்குத் துணைபோகும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.