8482 அன்பின் கருணையின் பேரூற்று.

ஏ.ஸீ.எஸ். ஹமீத் (ஆங்கில மூலம்), ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (தமிழாக்கம்). கொழும்பு 6: லங்கா இஸ்லாமிக் பவுண்டேஷன், 49, 6/1, காலி வீதி, 1வது பதிப்பு, மே 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரிண்ட்ஸ்).

vi, 138 பக்கம், விலை:  ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9297-02-4).

டாக்டர்  ஏ.ஸீ.எஸ். ஹமீத் 1960ம் ஆண்டு முதன்முறையாக இலங்கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகியவர். தொடர்ந்து ஏழு முறைகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி 36 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர். 1977ம் ஆண்டிலும் 1989ம் ஆண்டிலும் இருமுறைகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்று 12 ஆண்டு காலம் பணியாற்றியவர். இவர் வாழ்ந்த காலத்தில் ஆங்கில மொழியில் எழுதிய இஸ்லாமியக் கவிதைகளின் தொகுப்பாக The Spring of Love and Mercy என்ற நூல் வெளிவந்திருந்தது. சமீப காலங்களில் இவரை அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கிய செய்தியாக அமைந்திருந்தது இஸ்லாம் பலம் வாய்ந்ததொரு பயங்கரவாத சக்தியாக  உலக நாடுகளால் அடையாளம் காணப்பட்டமையாகும். அந்நிலையை மாற்றி, மனித இனத்தின் நன்மைக்காக இஸ்லாம் எதைப் போதித்தது என்பதை முஸ்லீம்களுக்காகவும் முஸ்லீம் அல்லாதவர்களுக்காகவும் வெளிப்படையாக அறியத்தருவதற்காக அவர் அந்நூலை அல்குர் ஆன் ஆயத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருந்தார். அவரது மறைவின் பின்னர் அக் கவிதைநூல் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவருகின்றது.

ஏனைய பதிவுகள்