8507 கண்ணீர் வெடிகள்.

ரவி இந்திரன். சென்னை 600078: ஒளிர் பதிப்பகம், 6, மகாவீர் வளாகம் முதல்மாடி, முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (சென்னை: ஸ்ரீ நியூ பீகொக் பிரின்டர்ஸ்).

32 பக்கம், வண்ணப்படங்கள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 20.5×30 சமீ.

பாரம்பரிய புத்தக அளவைவிட இரண்டு மடங்கு பெரிய அளவில், வண்ணப்பட ஓவியங்களுக்கும், கணனிச்சித்திர வடிவமைப்புக்கும் முக்கியத்துவம் அளித்து வெளிவந்திருக்கும் ஒரு கவிதைத்தொகுதி. ஈழத்துக் கவிதைகள் சேமித்து வைப்பதெல்லாம் காயங்களைத்தான் என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகளை அடியொற்றித் தன் நெஞ்சில் காயங்களாய்ப் பதிந்திருந்த கண்ணீர்த்துளிகளை கவிதகைளாகப் படைத்திருக்கிறார். “என்னோடு ஒரு கோப்பையில் சோறுண்ட நண்பர்கள், ஆடைகள் இன்றி அவர்கள் தெருக்களில் சுடப்பட்ட வேளைகளிலும், என் சகோதரிகள் கம்பி வேலிகளுக்குள்ளும், காற்றின் பற்றைகளுக்குள்ளும் குதறி எறியப்பட்ட வேளைகளிலும், தமிழச்சி வயிற்றில் பிறந்ததைத் தவிர வேறெந்தத் தவற்றையும் செய்யாத பிஞ்சுகள் நஞ்சுக்குண்டில் பொசுங்கிய போதும், இப்படி வார்த்தைக்குள் அடங்காத வலிகளை என் உறவுகள் அனுபவித்து துடிதுடித்த வேளைகளில் உயிர்பெற்றவை இக்கவிதைகளில் அனேகமானவை” என்ற கவிஞர் ரவி-இந்திரனின் முன்னுரைவரிகள் இக்கவிதைகளின் பின்னணியை உணர்த்துகின்றன. நூலாசிரியர் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.

ஏனைய பதிவுகள்