8513 காசி ஆனந்தன் கவிதைகள்.

காசி ஆனந்தன். சென்னை 17: காசி ஆனந்தன் குடில், A-6-1, சில்வர் பார்க் அபார்ட்மென்ட், 24, தணிகாசலம் தெரு, தி.நகர், 2வது பதிப்பு 2009, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (சென்னை 5: மாசறு, 28/8 முத்துக்காளத்தி தெரு, திருவல்லிக்கேணி).

221 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 17.5×12 சமீ.

முன்னர் இதே தலைப்பில் இரு தொகுதிகளில் இவரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இத்தொகுதி கவிஞர் காசி ஆனந்தனின் முக்கிய கவிதைகளைப் பல்வேறு பிரிவுகளுக்குள் அடக்குகின்றது.  உயிர் தமிழுக்கு என்ற முதலாவது பிரிவில் தமிழ்நாட்டில் 1959ஆம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை தங்கியிருந்த நாட்களிலும், தமிழ் ஈழத்தில் வாழ்ந்த நீண்டகாலப் போராட்ட வாழ்வின் நடுவிலும் கவிஞர் பாடிய 57 தமிழ்மொழி-இன-நாட்டு விடுதலைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. களமும் கவிஞனும் என்ற இரண்டாவது பிரிவில் இலங்கையின் காவல் நிலையங்களில் அடி உதை தாங்கியும் சிறைச்சாலைகளில் கைதியாய் இருந்தும் மருத்துவமனைகளில் நோயாளியாய் வருந்தியும் கவிஞர் பாடிய  9 பெருமூச்சுப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கண்ணீர் என்ற மூன்றாவது பிரிவில், 1958 முதல் 1983 வரையுள்ள காலத்தில் தமிழகத்திலும், இலங்கையிலும் மறைந்த தலைவர்களின் பேரில் பாடப்பட்ட 6 இரங்கல் கவிதைகள் இடம்பெறுகின்றன. மண்ணும் பண்ணும் என்ற நான்காவது  பிரிவில்,  1983க்குப்பின்னர் கவிஞரால் ஆக்கப்பட்ட  9 இசைப்பாடல்கள் இடம்பெறுகின்றன. இறுதிப்பிரிவில் கவிஞரின் தமிழன் கனவு என்ற குறுங்காப்பியம் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Pnp inferno Bonus De

Content Fotos Vom Kölner Karneval 2024 Mehr Pandas Wohnen Draußen im leben Palästinenser: Sturm In Hamas Bundesliga: Dämpfer Für Düsseldorf: 1:1 Um … herum Elversberg