ந.கோபிநாத். கோயம்புத்தூர் 641017: தகிதா பதிப்பகம், 4/833 தீபம் பூங்கா, கே.வடமதுரை, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (கோயம்புத்தூர்: ஐடியாஸ் டிசைனிங் அன்ட் பிரின்ட்ஸ்).
xvi, 116 பக்கம், பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 21.5×14 சமீ.
கவிஞர் கோபிநாத்திற்கு வெண்பா மெட்டில் பெருவிருப்புள்ளமையை இத்தொகுதிக் கவிதைகளில் பலவும் வெண்பாவின் சாயல்பெற்று வெளிவந்திருப்பதன் மூலமும், சில பாக்கள் சுத்தமான வெண்பாக்களாக அமைந்திருப்பதிலிருந்தும் அறிய முடிகின்றது. உரையும் பாட்டும் கலந்த நடையில் அமைந்த கண்ணீர்க் குளக்கட்டு கவிதையில் ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் எழுந்து நிமிரும் வலிமையைத் தாய்க்குலமே வழங்குமென்ற ஒரு கருத்தை கவிஞர் முன்வைக்கிறார். கவிதைகள் அனைத்தும் எளிய சொல்நடையும் உணர்வோட்டமும் பெற்று மிளிர்கின்றன. லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்க்கவிஞர் இவர்.