அநு.வை.நாகராஜன். அனுராதபுரம்: வைரமான் வெளியீடு, 525/29, புதிய நகரம், 1வது பதிப்பு, டிசம்பர் 1971.(கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).
xxiv, 45 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
விளக்கவுரையுடன் கூடியதான இசைப்பாடல் தொகுப்பு. வைரமான் நூல் வெளியீட்டு வரிசையில் முதலாவது நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய நாகராஜன், யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் பிறந்தவர். இவரது சொந்தஇடம் அநுராதபுரம். பின்னாளில் தெல்லிப்பழையைச் சேர்ந்த கட்டுவனைத் தன் துணைவியின் பேரில் புகுந்த மண்ணாகக் கொண்ட இவர் கொழும்பில் வாழ்ந்தவேளையில் எழுதிய முதலாவது நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 105311).