8565 அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்.

தாட்சாயணி. கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3 V, எட்வேர்ட் அவென்யூ, 1வது பதிப்பு, மார்ச் 2011. (மஹரகம: தரஞ்ஜி பிரின்ட்ஸ், நாவின்ன).

viii, 168 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-53389-0-5.

தாட்சாயணியின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு. இந்நூலில் 16 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தாட்சாயணியால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்று பிரசுரமானவை இவை. சமூகத்தில் தான் பார்த்தவற்றை உள்வாங்கி உணர்ந்தவற்றை, அதனால் தனக்கு நேர்ந்த பாதிப்பை கலை நேர்த்தியோடு எளிய நடையில் இங்கு பதிவுசெய்திருக்கிறார் . மிதிபடும் நாணல்கள், சாட்சிகள் ஏதுக்கடி, சொல்லிக்கொண்டு போனால் என்ன, நெகிழ்ச்சி, அங்கையற்கண்ணியும் அவள் அழகிய உலகமும், விட்டு விடுதலையாகி, உடைவு, கனவுகள் நனவல்ல, தீர்க்கப்படாத சமன்பாடுகள், சாவித்திரி, அவள் அப்படியா, பூக்களும் நிறம் மாறும், தேன்வதை, கொம்பு, உரிமை இழக்கும் உயிர்கள், பழி ஆகிய தலைப்புகளில் இவை வெளிவந்துள்ளன. கொழும்பு-மீரா பதிப்பகத்தின்  92ஆவது நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  220148).

ஏனைய பதிவுகள்