வே.தில்லைநாதன். திருக்கோணமலை: வே.தில்லைநாதன், 140/50 கடல்முக வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (கொழும்பு 13: டிசைன் லாப், 190 ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை).
xiv, 220 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0634-03-3.
சாவகச்சேரியயைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரான வே.தில்லைநாதன் திருக்கோணமலையை வாழ்விடமாகக் கொண்டவர். மட்டுவிலான், லீலா மணாளன் போன்ற புனைபெயர்களிலும் இலக்கிய உலகில் அறியப்பட்டுள்ளார். இவர் எழுதிய நாவலான இதயத் தந்திகள் மீட்டப்படுகின்றன- 1978ம் ஆண்டுக்கான சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுகொண்டது. இவர் எழுதிய அண்மைக்கால சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். ஆங்கில ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், ஆங்கில சேவைக்கால ஆலோசகராகவும் கல்விப் புலத்தில் பல பதவிகளை வகித்தவர். இத்தொகுப்பிலுள்ள கதைகளில் தனது தொழில்சார் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். குடும்ப உறவுகளின் பிணைப்பையும் ஒற்றுமையையும் கதைகளில் வலியுறுத்துகின்றார். நையாண்டி கலந்த மொழிநடை இவரது கதைகளைச் சலிப்பின்றி வாசிக்கத்தூண்டுகின்றன.