கொற்றை பி.கிருஷ்ணானந்தன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
xi, 100 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-8354-42-1.
1972இல் ஈழநாடு பத்திரிகையில் தனது முதல் கவிதையை எழுதிய ஆசிரியர் தொடர்ந்து இலங்கை வானொலியில் இதிகாசங்களும் கதாபாத்திரங்களும் என்ற தொடரை நான்கு மாதங்கள் வழங்கியவர். பின்னர் நீண்டகால இலக்கிய அஞ்ஞாதவாசம் செய்தபின்னர் 2007முதல் மீண்டும் வீறுடன் தனது இலக்கியப் பயணத்தை தொடர்கிறார். கொற்றை பி.கிருஷ்ணானந்தன் எழுதிய அண்மைக்காலச் சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஆருத்திரா தரிசனம், நெஞ்சு பொறுக்குதில்லையே, தண்ணீர் விட்டோ வளர்த்தோம், ஒரு கோப்பை சோறு, விதிகளே விதியாக, தேவர் கூட்டத்தினுள் அசுரர்களாய், ஞானம், விலகும் திரைகள், கிணறு, இரத்தம் தடிப்பானதுதான், இந்த இரவு விடிந்துவிடவேண்டும், அம்மாக்களின் ஆத்மா, கோலங்கள், உறவு, இன்னுமோர் உலகம் ஆகிய 15 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இந்நூலின் மேலட்டையில் பிக்காசோவின் நவீன ஓவியம் (மண்டலின் இசைக்கருவியை வாசிக்கும் பெண்) இடம்பெற்றுள்ளது. இதே ஓவியத்தை அட்டைப்படமாகக் கொண்டு ந.மயூரரூபனின் நீயுருட்டும் சொற்கள் (கரிகணன் பதிப்பகம், யாழ்ப்பாணம், ஓகஸ்ட் 2012) சமகாலத்தில் வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.