8591 ஓய்வூதியம் என்று வருமோ? சிறுகதைகள்.

அமி விக்டர். புத்தளம்: நவமணி வாசகர் வட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (சென்னை 600094: B.V.R.. ஆப்செட்).

xvi, 100 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 17.5×12.5 சமீ.

ஓய்வூதியம் என்று வருமோ, அடேயப்பா யூரோப்பா, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், மழை ஒழுக்கு, ஏப்ரல் பூல், கலண்டர், செப்டெம்பர் 11, உயிருக்குள் உயிரே, வேஷம், யாருக்கு வைரஸ் ஆகிய தலைப்புகளைக்கொண்ட பத்துச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த புகைப்படப் பிடிப்பாளரான அமி விக்டர், கவிதைகள் மூலம் ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமானவர். பின்னாளில் நவமணியிலும் பிற ஊடகங்களிலும் இவரது ஆக்க இலக்கியப் படைப்புகள், கவிதைகளாகவும் சிறுகதைகளாகவும் வெளிவந்தன. இந்நூல் இவரது முதலாவது நூலாகும்.

ஏனைய பதிவுகள்