8649 ஆறா வடு: நாவல்.

சயந்தன். சென்னை 600 014: தமிழினி, ரியல் ரீஜன்சி -58, 102 பாரதியார் சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600 014: பாவை பிரிண்டர்ஸ்).

192 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21×13.5 சமீ.

1987இல் இந்திய இராணுவம் ஈழமண்ணில் போய் இறங்கியபோது மக்கள் சமாதானம் வருமென நம்பினார்கள். அது கைகூடவில்லை. பின்னர் ரணில் விக்கிரமசிங்க-விடுதலைப்புலிகள் இடையிலான பேச்சுவார்த்தை 2003 களின் பின்னர் மேலும் ஒரு சமாதான வாழ்வுக்கான நம்பிக்கையை மக்களிடம் ஊட்டியது. இவ்வாறாக கானல் நீரான சமாதான காலங்களில் 1987 முதல் 2003வரையிலானதொரு  காலப்பகுதியில் இந்நாவல் நகர்கின்றது. ஈழ விடுதலைப்போர்ப் பின்னணியில் எச்சூழலுக்கும் ஏற்ப எவ்விதத்திலாவது வாழ்ந்தவிடத்துடிக்கும் உயிர்வேட்கையைப் புலம்பெயர்தலை படைப்பாற்றலுடன் கலைநயத்தோடு இந்நாவல் கூறுகின்றது.  சயந்தன் சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். இது இவரது முதலாவது நாவல்.

ஏனைய பதிவுகள்

16445 வில்லி பாரதம்: வாரணாவதச் சருக்கம்.

வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: தா.க.சு., மேலைப் புலோலி, 1வது பதிப்பு, ஜனவரி 1930. (பருத்தித்துறை: ஸ்ரீ.திருஞானசம்பந்தபிள்ளை, கலாநிதி யந்திரசாலை). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. வில்லிபாரதம் ஆதிபருவத்துள்ள