8663 கலி புராணம்: நாவல்.

மு.தளையசிங்கம். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, மே 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).

102 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-49-7.

கோவை , சமுதாயம் பிரசுராலய வெளியீடாக முன்னர் வெளிவந்த நூலின் மீள்பிரசுரம் இதுவாகும். கலிபுராணம்- உண்மைக் கதையொன்றினால் தூண்டப்பட்டதால் எழுந்த நாவலாகும்.  ஒரு வெள்ளாள குலத்துப் பெண்ணோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரவன் நீண்டகாலமாகக் களவாக உறவு வைத்திருந்து பின்னர் அவளைக் கொலை செய்த நிகழ்ச்சி தான் இதன் பின்னணி. ஆனால் கதை வழமையான சாதிப் போராட்டக் கதையாக, தாழ்த்தப்பட்ட மக்களை ஊரைவிட்டுத் துரத்தும் பேயோட்டக் கதையாகத் தோற்றம் காட்டினாலும் இது இன்று ஈழத்திலும் தமிழகத்திலும் தாழ்த்தப்பட்ட (தலித்) மக்களுக்கெதிரான மேற்கத்திக் காரரின் அடக்குமுறையை, அக்கிரமங்களை, வெளிப்படுத்தவென எழுதப்பட்ட எந்தவொரு கதையுடனும் ஒப்பிடுவது முழுமையாகாது. இதன் பரப்பெல்லை விசாலமானது. எடுத்துச்சொல்லும் முறையும் விசாலமானது.

ஏனைய பதிவுகள்